Friday, December 25, 2009

யந்திரத் திருட்டு, நஜிப் பொறுப்பேற்க வேண்டும்: பாஸ் தகவல்பிரிவுத் தலைவர் சாடல்

F5 fighther jetசு ங்கை பீசி அரச மலேசிய விமானத் தளத்திலிருந்து
கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு ஜெட் போர் விமானங்கள் பற்றிய செய்தி நாட்டை அதிர்ச்சி அலைக்குள் தள்ளியுள்ளது.

“அப்போதைய தற்காப்புத் துறை அமைச்சராய் இருந்தவர் நஜிப் துன் அப்துல் ரசாக், இப்போதைய பிரதமர். அவர் பொறுப்பில் இருந்த காலத்தில் இந்தத் திருட்டு  நடந்திருப்பதால் நஜிப் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் இட்ரிஸ் அஹ்மட் கூறுகிறார்.

“நஜிப் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. நஜிப் தற்காப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் இந்தத் திருட்டு நடந்திருக்கிறது. 2008 ஆகஸ்டு மாதம் இந்த யந்திரங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுதே நஜிப் பதவி விலகியிருக்க வேண்டும். அவர் பதவி விலகியிருந்தால் இதைப் பற்றிய விசாரணைகள் முழுமையாக நடத்தப்பட்டிருக்கும்” என்று இட்ரிஸ் அஹ்மட் கூறினார்.

கடந்த சனிக்கிழமை உள்ளூர் நாளேடு ஒன்று இதனை அம்பலப்படுத்தியது. அடுத்த நாள் காணாமல் போனது ஒன்றல்ல இரண்டு யந்திரங்கள் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று தற்காப்புத் துறை அமைச்சர் டத்தோசிரீ டாக்டர் அமாட் ஜாஹிட் அமிடி “இரண்டு யந்திரங்கள் மட்டுமல்ல, பல உதிரிப் பாகங்களும் காணாமல் போயிருக்கின்றன என்று கூறினார்.

இத்திருட்டுத் தொடர்பாக பிரிகேடியர் ஜெனரல் ஒருவரும் துறைத் தலைவர் ஒருவரும் உட்பட 20 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லப்பட்டது. என்றாலும் தற்காப்பு அமைச்சரின் அறிக்கை வேறு மாதிரியாக இருக்கிறது. உயர் நிலைத் தலைவர்கள் யாரும் இதில் சம்பந்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.  விமான யந்திரங்களை வாங்கும் தனியார் நிறுவனம் ஒன்று விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தற்காப்பு அமைச்சரின் அறிக்கையை ஆராய்ந்தால் அரச மலேசிய விமானப் படையின் உச்ச நிலை அதிகாரிகள் யாரும் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் விமான யந்திரங்களை வாங்கும் தனியார் நிறுவனம் ஒன்று சம்பந்தப்படிருப்பதாகவும் தெரிகிறது. விசாரணை இந்த வழியிலேயே போனால் எங்கே போய்ச் சேரும் என்பது இப்போதே ஓரளவு வெளிச்சமாகிறது.

3 comments:

  1. wanakum YB...

    enjin pocik,umno-mic adiik pek yeelek pru-13

    wallahua'lam

    ReplyDelete
  2. Salam YB

    Alhamdulillah, teringin juga saya komen sbb 2 sahabat diatas nampaknya nya faham apa yang ditulis. Saya langsung tak faham tapi tengok F5E tu .... fahamlah saya akan maksudnya.

    Inilah nikmatnya bila PAS FOR ALL

    ReplyDelete

Pandangan mungkin berbeza, komenlah dengan berhemah

Recent Posts ; Parlimen Kota Raja

Recent Post

Popular Posts