பாக்காதான் ராக்யாட் மத்திய ஆட்சியை அமைத்தால் இஸ்லாம் அல்லாத பாஸ் உறுப்பினர்களுக்குச் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் எனப் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸிரி அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.
டத்தோஸிரி அப்துல் ஹாடி அவாங் திரங்கானுவை ஆட்சி செய்த போது இஸ்லாம் அல்லாதவர்களும் சட்டமன்ற பொறுப்புகளை ஏற்கலாம் எனத் தீர்மானம் செய்யப்பட்டது. இந்தக் கொள்கை 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை பாஸ் கட்சி அறிமுகம் செய்திருந்தது.
இந்த நடவடிக்கை திரங்கானு, கிளந்தான் மற்றும் பெர்லீஸ் ஆகிய மாநிலங்களில் ஏற்புடையதாக அமையும். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழுகின்ற இம்மாநிலங்களில் இஸ்லாம் அல்லாதவர்கள் சட்டமன்ற பதவிகளில் குறைவான பங்களிப்பே இருக்கின்றன.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாக்காதான் ராக்யாட் போட்டியிட்டு கிளந்தான் மாநில ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு கெடா, பினாங்கு, பேராக் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களையும் வெற்றி கொண்டது.
“பொதுவாக இப்பதவிகள் யாவும் பாஸ் கட்சியின் அமைப்பைப் பொருத்தது என அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியில் இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்புகள் வழங்கப்படுவதற்குப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் போட்டியிடவிருக்கும் மொத்த இடங்களை வைத்து தான் இதனைத் தீர்மானிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Pandangan mungkin berbeza, komenlah dengan berhemah